கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞரும், இரத்தினபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக இருவரையும் காணவில்லையென அவரவர் குடும்பத்தினர் தேடியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை பெரியபரந்தன் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த இருவரது சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலங்கள் காணப்பட்ட பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்தே சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சடலமாக மீட்கப்பட்ட யுவதி கடந்த சில நாட்களுக்கு முன் பட்டதாரி நியமனம் பெற்ற யுவதியாகும், இளைஞர் இலங்கை மின்சார சபையில் ஒப்பந்தப் பணியில் ஈடுப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM