பெய்ரூட் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை நன்கொடையாக வழங்கிய தேயிலையை லெபான் ஜனாதிபதி மைக்கல் அவுன் தனது குடும்பத்தினருக்கும், காவலர்களுக்கும் விநியோகிஸ்ததாக கடும் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார்.

ஆகஸ்ட் 4 பெய்ரூட் வெடிப்பில் 190 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந் நிலையில் மத்திய பெய்ரூட்டை அழித்த ஒரு நாட்டில் உத்தியோகபூர்வ ஊழலுக்கு இந்த சம்பவம் மற்றொரு எடுத்துக் காட்டு என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பல பெண்கள் லெபனானில் பணிப் பெண்களாக பணிபுரிகின்றனர். இந் நிலையில் பெய்ரூட் வெடிப்பினையடுத்து லெபனானுக்கு ஆதரவினை வெளிப்படுத்திய நாடுகளில் ஒன்றாகவும் இலங்கை உள்ளது.

பெய்ரூட் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,675 கிலோ (3,685 பவுண்ட்ஸ்) தேநீரை இலங்கை நன்கொடையாகவும் அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.