மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பால்சேனை பிரதேசத்தில் கசிப்பு விற்பனைக்கு எடுத்துச் சென்ற ஒருவரை நேற்று புதன்கிழமை (09) கைது செய்ததுடன் 20 போத்தல் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைக்க தவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று புதன்கிழமை  மாலை பால்சேனை பிரதேசத்தில் பொலிசார் சிவில் உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் 

இந்த நிலையில் களப்பு பகுதியில் இருந்து கசிப்பை எடுத்து கொண்டு நடந்து சென்று கொணடிருந்த போது கசிப்பு வியாபாரியை பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்ததுடன் 20 போத்தல் கொண்ட கசிப்பை மீட்டுள்ளனர் 

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்