வவுனியா, சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இரவு 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து செக்கடிப்புலவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் எதிர் திசையில் வவுனியா நோக்கி வந்த காருடன் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கரிகரன், மதுசன், சர்மிலன் ஆகிய மூவர் படுகாயமடைந்து நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான இரு வாகனங்களும் பாரியளவில் சேதங்களுக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.