மூன்று மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மொத்தம் 664 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

அதன்படி கட்டாரிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான க்யூஆர் -668 என்ற விமானத்தில் 89 இலங்கையர்கள் அதிகாலை 1.45 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர்.

அதேபோன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யுஎல் -266 என்ற விமானத்தில் 293 இலங்கையர்கள் அதிகாலை 4.53 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 290 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -226 என்ற விமானத்தில் அதிகாலை 4.23 மணிக்கு மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.