இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ‘எம்டி நியூ டயமன்ட்’ எண்ணெய்க் கப்பலிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்படுவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கையை உறுதி செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டிலிவேரா கடல் சுற்றுச் சூழல் மாசடைதல் அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எம்டி நியூ டயமன்ட் கப்பலுக்கு அருகே கடலில் இருந்து சேகரிக்கப்பட்ட எண்ணெய் மாதிரிகளை அரசு ஆய்வாளர் துறைக்கு சமர்ப்பிக்குமாறும்  கடல் சுற்றுச் சூழல் மாசடைதல் அதிகார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரியும் சட்டத்தரணியுமான நிஷாரா ஜெயரத்ன தெரிவித்தார்.