இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஓஸ்ட்ரா செனேகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதால், பரிசோதனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இங்கிலாந்தின் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், ஓஸ்ட்ரோ செனெகா நிறுவனமும் இணைந்து ஈடுபட்டிருக்கின்றன. இந்நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசி, முதல் இரண்டு கட்டங்களை கடந்து, மூன்றாம் கட்டத்திற்கு அடி எடுத்து வைத்தது. அதனால் உலகம் முழுவதும் இந்நிறுவனம் தயாரிக்கும் தடுப்பு மருந்து மீது நம்பிக்கையும் காத்திருந்தது.
இந்நிலையில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உலகம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்குபற்றினர். இவர்களிடம் தடுப்பூசி மருந்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிலருக்கு ‘காரணம் கண்டறிய முடியாத பக்க விளைவுகள்’ ஏற்பட்டது. இதனால் இந்த பரிசோதனை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
உடல்நலக்குறைவு ஏற்பட்ட தன்னார்வலர்கள் எங்கு இருக்கிறார்கள்? அவரது எம்மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்பட்டது? என்பது குறித்த தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை வெற்றிகரமாக முடிவடைந்திருப்பதால் விரைவில் தன்னார்வலர்கள் பங்குபற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓக்ஸ்போர்ட் பல்கலை கழகம் கண்டறிந்திருக்கும் கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு கேள்விகுறியாகியிருப்பதால், கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டறிவதற்காக ஈடுபட்டுள்ள ஏனைய மருந்து நிறுவனங்கள்,பாதுகாப்பு விடயத்தில் உறுதிமொழி ஏற்றிருப்பதாக அந்நிறுவனங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM