இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அவுஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு!

09 Sep, 2020 | 03:54 PM
image

(நா.தனுஜா)

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்புவிடுத்திருக்கின்றார்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி நேற்று செவ்வாய்கிழமை அலரிமாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

Australian Prime Minister invited to visit Sri Lanka

இதன்போது மஹிந்த ராஜபக்ஷவின் பொதுத்தேர்தல் வெற்றி மற்றும் பிரதமராக மீள்நியமனம் என்பவற்றுக்கு வாழ்த்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை வழங்கிய ஒத்துழைப்பிற்கு தனது நன்றியையும் வெளிப்படுத்தினார்.

அதேவேளை பல வருடகாலமாக தொடர்ச்சியாக அவுஸ்திரேலிய வழங்கிவருகின்ற உதவிகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அண்மையில் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸனுடன் தான் தொலைபேசியில் கலந்துரையாடியது பற்றியும் நினைவுகூர்ந்தார். அத்தோடு கொரோனா வைரஸ் பரவல் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்ததும் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் அவுஸ்திரேலிய பிரதமருக்கு மஹிந்த ராஜபக்ஷ அழைப்புவிடுத்தார்.

மேலும் இந்தச் சந்திப்பின்போது புதிய அரசாங்கம் முன்னுரிமை வழங்கியிருக்கும் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அவற்றில், குறிப்பாக விவசாயத்தை ஊக்குவித்தல் மற்றும் நாட்டுமக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுத்தல் ஆகிய விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். அத்துடன் இருநாடுகளிலும் பொதுவாக பெருமளவானோர் நாள்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவது குறித்தும் இதன்போது பேசப்பட்டது. அவுஸ்திரேலியாவில் 10 பேரில் ஒருவர் இந்நோயினால் அவதியுறுவதாக அந்நாட்டு உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

கல்வி, தொழிற்பயிற்சி, பயங்கரவாதத்தடுப்பு, ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஒழிப்பு ஆகிய விடயங்களில் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயலாற்றுவது பற்றியும் இச்சந்திப்பின் போது பேசப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் விரிவடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர், இலங்கை ஒரு கேந்திர முக்கியத்துவமுடைய தளமாக உருவாகுவதைக் காண்பதற்கு அவுஸ்திரேலியா விருப்பம் கொண்டிருப்பதாகவும் எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37