குருவிட்ட -  புஸ்ஸெல்ல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது வெளிநாட்டு கைக்குண்டு மற்றும் டீ 56 ரக துப்பாக்கி ரவைகள் ஐந்துடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குருவிட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புஸ்ஸெல்ல - பரகடுவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவராவார். சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.