(செய்திப்பிரிவு)

வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக புத்தளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய புழுதிவாய பகுதியில்  செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 68 கிலோ கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் பயணித்த ஜீப் மற்றும் மோட்டார் வாகனமொன்றும்  சோதனைக்கு உட்டுத்தப்பட்ட போது அவற்றிலிருந்து 68 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் ஜீப் மற்றும் மோட்டார் வாகன சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலாவெளி மற்றும் பெரியமுல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 48 மற்றும் 31 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்