வென்னப்புவ வய்க்கலா பிரதேசத்தில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு குழந்தை யொன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

ஒரு வருடம் 10 மாதங்களான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். 

பெற்றோர் இரவு உணவு உட்கொண்டபோது குழந்தை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.

இதன்போது, மின்சாரத்தை கடத்தும் பாதுகாப்பற்ற வயரை குழந்தை தொட்டதால் குறித்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.