தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஸ்ரவானி கொண்டபல்லி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மனசு மமதா, மெளனராகம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் ஸ்ரவானி நடித்துள்ளமை குறிப்பிடதக்கது. இந்நிலையில்  ஹைதராபாத்  மதுரா நகரில் உள்ள தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.அவருடைய பெற்றோர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த பொலிஸார் ஸ்ரவானியின்  உடலைப் பிரதேசப் பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.

தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.