உப்புத் தொழிற்சாலை ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரக்சிய தகவலுக்கமைய நேற்று மாலை புழுதிவயல் பகுதியில் உப்புத் தொழிற்சாலை ஒன்றில் தேடுதல் நடவடிக்கையின்போதே அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 65 கிலோ கிராம் கேரளா கஞ்சா மற்றும் 36 கிராம் ஐஸ் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதன்போது சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சொகுசு காரொன்றில் 3 கிலோகிராம் கேரளா கஞ்சா திருகோணமலை நிலாவெலி பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்டதாக பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்தனர். 

இதன்பொழுது சொகுசு கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி சுமார் 140 இலட்சம் ரூபா எனவும் ஐஸ் போதைப்பொருள் சுமார் 3 இலட்சம் பெறுமதி எனவும் பொலிசார் தெரிவித்தனர்.