மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மொத்தம் 296 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

சவூதி அரேபியாவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யுஎல் -282 என்ற விமானத்தில் 258 இலங்கையர்கள் இன்று அதிகாலை 2.11 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 10 இலங்கையர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.-648 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 1.23 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும், கத்தார் ஏர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான கியூஆர் -668 விமானத்தில் 28 இலங்கையர்கள் தோஹாவிலிருந்து அதிகாலை 1.33 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர்.

விமான நிலையத்துக்கு வருகை தந்த இவர்கள் அனைவரையும் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.