சு.க. மறு சீரமைக்கப்படும் : கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன

By Vishnu

08 Sep, 2020 | 07:55 PM
image

(செ.தேன்மொழி)

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மறுசீரமைப்பு தெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கட்சியின் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அமைப்புடன் கலந்துரையாடப்பட்டதாக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்துரைக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியதாவது,

இளைஞர் அமைப்பு மற்றும் பெண்கள் அமைப்புடன் பொதுத் தேர்தலின் பின்னர் இன்றுதான் அவர்களை சந்திக்க முடிந்தது. இதன்போது எதிர்வரும் தேர்தல்களின் போது எமது கட்சியின் இளைஞர் அணி மற்றும் பெண்கள் அமைப்பின் உறுப்பினர்கள் தொகையை எவ்வாறு அதிகரித்துக் கொள்வது என்பது தொடர்பில் கலந்துரையாடினோம்.

இதேவேளை காலம்சென்ற முன்னாள் பிரமர் சிறிமவோ பண்டார நாயக்கவின் நினைவுதின நிகழ்வை எதிர்வரும் 10 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். அதற்கமைய மதவழிபாட்டு நிகழ்வுகள் என்பன ஒழுங்குச் செய்யப்பட்டுள்ளன. 10 ஆம் திகதி தானம் வழங்கும் நிகழ்வும் ஒழுங்கு செய்வது தொடர்பில் கலந்துரையாடினோம்.

கட்சியின் முன்னாள் தலைவரும் , முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்க பண்டார நாயக்கவை கட்சியுடன் இணைத்தே செயற்பட வேண்டும். அவரை இணைத்துக் கொள்ளக் கூடாது என்று நான் ஒருபோதும் தெரிவித்ததில்லை. கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. அதனை நிவர்த்தி செய்து கட்சியை முன்னேற்றுவதற்காக கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கட்சியின் முன்னாள் அல்லது தற்போதைய உறுப்பினர்கள் யாராவது கட்சி வீழ்ச்சியடைந்துள்ளது என்று குற்றஞ்சாட்டினால் அவர்களும் அந்த வீழ்சி தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டும். எங்களை பொறுத்தமட்டில் கட்சி வீழ்ச்சியடைய வில்லை. பின்னடவை சந்தித்துள்ளது. கட்சியை முன்னேற்றுவது தொடர்பிலே தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right