ராஷ்யா தலையிட்டால் எமது கட்சிக்கு ஆபத்து - கமலா ஹரிஸ்

Published By: Digital Desk 4

08 Sep, 2020 | 07:21 PM
image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், இம்முறையும் ரஷ்யா தலையிட்டால், ஜனநாயக கட்சிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது,'' என, அக்கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா: துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்வு | Virakesari.lk

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, ஆப்ரிக்க - அமெரிக்கரான கமலா ஹாரிஸ், கலிபோர்னியா மாநிலத்தின் செனட்டர் ஆக உள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க தொலைகாட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்,

 அமெரிக்காவில் 2016 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்தது. அது குறித்து ஆய்வு செய்த செனட் புலனாய்வு குழுவில் நான் இருந்தேன். என்ன நடந்தது என்பது குறித்த விரிவான அறிக்கைகளை நாங்கள் வெளியிட்டோம்.

இந்த தேர்தலிலும், ரஷ்யாவின் தலையீடு இருக்கும் என தெரிகிறது. அவ்வாறு இருந்தால் அது, ஜனநாயக கட்சியை பாதிக்கும். கடந்த, 2013ல், உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக, ஷெல்பி ஹோல்டர் என்பவரின் வாக்குரிமை முடக்கப்பட்டது. இதையடுத்து, கறுப்பர்கள், தனி நபர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் வாக்குரிமையை முடக்கும் செயல்கள் தொடர்கின்றன.

வடக்கு கரோலினா மேல் முறையீட்டு நீதிமன்றம், கறுப்பர்கள் வாக்களிப்பதை  தடுக்கும் வகையில், மிக நுணுக்கமான சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்திருப்பதே இதற்கு சான்று.

கொரோனா குறித்து, வல்லுனர்கள் விடுத்த எச்சரிக்கையை, டிரம்ப் அலட்சியப்படுத்தி விட்டார். அதே கொரோனா பிரச்னையை, தற்போது தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார். இப்படிப்பட்ட ஒருவர், அமெரிக்க ஜனாதிபதியாக  உள்ளார். எத்தகைய தடைகளையும் கடந்து, நாங்கள் வெற்றி பெறுவோம். என்று தெரிவித்தார்.t

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17