கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா வைரஸினால் அதிக இறப்புக்களைச் சந்தித்த நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

 புதிய நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் இறப்புக்கள் அதிகரித்திருப்பதாக இந்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் 1,133 பேர் கொவிட் -19 தோற்றால் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால் புதிய தினசரி கொரோனா தொற்று பதிவுகள் 75,809 ஆக காணப்படுகின்றன. இது கடந்த ஒரு வாரத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

அமெரிக்காவிற்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்று பதிவான  நாடாக பிரேசிலை பின்தள்ளி இந்தியா முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்ககும்.