(செய்திப்பிரிவு)
மலேசியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 7 இலட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணனியை கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேநபர் கொள்ளையிட்ட மடிக்கணனியை மூவாயிரம் ரூபாவுக்கு அடகு வைத்து அந்த பணத்தில் ஹெரோயின் கொள்வனவு செய்த போது நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கிருலப்பனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 8 கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து தங்க நகைகளை திருடிச் சென்ற குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து ஒரு மாதத்திற்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.
சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்ட மடிக்கணனி பொரல்லை பகுதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் 49 வயதுடைய பொரல்லை - சகஸ்புர பகுதியைச் சேர்ந்தவராவார். மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM