மட்டக்களப்பு கரடியனாறு மகாஓயா பிரதானவீதி மரப்பாலம் பகுதியில் முச்சக்கர வண்டியுடன்  உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்து 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (08) காலையில் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தினர். 

கரடியாறு பகுதியில் இருந்து மகாஓயா பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் கரடியனாறு மரப்பாலம் பகுதியில் இருந்து மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வீதியை கடக்க முற்பட்டபோது முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர் 

இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்