தமிழில் நாயகனாகவும், கதையின் நாயகனாகவும் நடித்தவர் நடிகர் நவீன் சந்திராபழனியப்பா கல்லூரி, அகராதி,கூட்டம், சரபம், சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இன்னும் யார் என்று நினைவில் வரவில்லை என்றால் சசிகுமார் நடித்த பிரம்மன் என்ற படத்தில் அவருடைய நண்பனாக நடித்தவர் தான் இந்த நவீன் சந்திரா.

தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தாய்மொழியான தெலுங்கில் சென்று வாய்ப்பு தேடி சில படங்களில் நடித்தார். ஆனால் படங்கள் வெற்றிப் பெறாததால் எம்முடைய அருண் விஜய் பாணியை பின்பற்றத் தொடங்கிவிட்டாராம். அதாங்க வில்லனாக நடிப்பது.

தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணியில் இருக்கும் நான் புகழ் நடிகர் நானி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க நவீன் சந்திரா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தகவல் : சென்னை அலுவலகம்