(செய்திப்பிரிவு)

கஹவத்த மற்றும் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

கஹவத்த - கல்லேன் கந்த பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த  தேடுதல் நடவடிக்கைகளின் போது வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் 72 வயதுடைய கஹவத்தை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே வேளை மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நில்பானாகொட - வேகொவ்வ பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் போர 12 ரக துப்பாக்கி ரவைகள் பயன்படுத்தக்கூடிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி , போர 12 ரக துப்பாக்கி ரவைகள் 7 மற்றும் டீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 3 ஆகியன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

நில்பானாகொட மற்றும் வேகொவ்வ பகுதிகளைச் சேர்ந்த 36, 38 மற்றும் 49 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விhசரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.