வவுனியாவில் ஐந்து வருடமாக மூடிய நிலையில் தாய், சேய் நிலையம்!

08 Sep, 2020 | 03:15 PM
image

வவுனியாவில் கட்டிமுடிக்கப்பட்ட தாய், சேய் பாராமரிப்பு நிலைய கட்டடம் கடந்த ஐந்து வருடமாக திறந்து வைக்கப்படாமல் காத்திருக்கின்றதாக இதனால் தாய்மார் பெரிதும் பாதிப்புற்று வருவதாகவும் இந்நிலையத்தை திறந்து வைப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோருகின்றனர் .

வவுனியா பட்டாணிச்சூர் , பட்டக்காடு பகுதிகளில் வசிக்கும் 1600 குடும்பங்களை உள்ளடக்கிய தாய், சேய் பராமரிப்பு நிலைய கட்டடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு கட்டிமுடிக்கப்பட்டு ஐந்து வருடங்களாகியும் இன்று வரையிலும் பொது மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவில்லை .

தற்போது பொது நோக்கு மண்டபத்தில் கிராம அலுவலகர் அலுவலகம் , தாய் சேய் பாராமரிப்பு நிலையம் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் , விஷேட தேவைகளுக்குட்பட்டவர்கள் , சிவில் பாதுகாப்புக்கூட்டங்கள் என்பன இடம்பெற்று வருவதால் அங்குள்ள தாய் சேய் நிலைய பராமரிப்புக்காக வரும் தாய்மார் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகின்ற இவ்வாறு தனியாக அமைக்கப்பட்டுள்ள தாய் சேய் பராமரிப்பு நிலையம் திறந்துவைக்கப்படமல் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் அரசாங்கத்தின் வடக்கு அபிவிருத்தி திட்ட நிதி ஒரு மில்லியன் ரூபாயில் அமைக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்தும் குறித்த தாய் சேய் பாராமரிப்பு நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட வில்லை . 

எனவே குறித்த நிலையத்தினை திறந்து வைப்பதற்குரிய நடவடிக்கையினை அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் துரிதமாக மேற்கொள்ளுாறு பொதுமக்கள் கோரிவருகின்றனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04