புத்தளம் பகுதியில் வீடொன்றுக்கு பின்புரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசிய தகவ்லுக்கமைய இன்று அதிகாலை மதுரங்குளி கடையாமோட்டை பகுதியில் வீடொன்றை சோதனை செய்த வேளை வீட்டின் பின் புரத்தில் குழிதோண்டி புதைத்து  வைக்கப்பட்டிருந்த சுமார் 12 கிலோகிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. 

இதன்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் புத்தளம் பொலிசார் மேகொண்டு வருகின்றனர்.