பற்றைகள் மண்டிய நிலையில் சிறுவர் பூங்கா - மக்கள் விசனம்!

08 Sep, 2020 | 12:09 PM
image

முல்லைத்தீவு கரைதுரைப்பற்று வற்றாப்பளைப்பிரதேசத்தில் சுமார் ஒரு மில்லியன் ரூபா செலவில் கம்பரலிய திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பூங்கா இதுவரை திறக்கப்படாது பற்றைகள் மண்டிக்காணப்படுகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கரைதுரைப்பற்றுப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள வற்றாப்பளைக்கிராமத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவின் சிபாரிக்கு அமைவாக கம்பரலியத்திட்டத்தின் கீழ் சுமார் ஒரு மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பூங்கா இதுவரை திறக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி சிறுவர் பூங்காவின் கட்டுமானப்பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கடந்த ஆறுமாத காலமாக எந்தப்பணிகளும் முன்னெடுக்கப்படாமலும்     திறந்து வைக்கப்படாமலும் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் தற்போது பற்றைகள் மூடிக்காணப்படுகின்றன.

அபிவிருத்தி என்ற போர்வையில் இவ்வாறு பாரிய நிதி செலவிட்டு மேற்கொள்ளப்பட்டு இவ்வேலைத்திட்டமானது மக்கள் பயன்பாடின்றிக்இடப்பது தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46