முகக்கவசங்களை சரியாகப் பயன்படுத்தினால், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முடியும்.

கொரேனா தொற்று பரவலை தடுக்க உலக சுகாதர ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளில் முகக்கவசமும் ஒன்று, 

முகக்கவசங்கள் உங்களிடமிருந்து ஏனையோருக்கு நோய் கிருமிகள் பரப்புவதைத் தடுப்பதுடன் பிறரிடமிருந்து  உங்களுக்குள் நோய்கிருமிகள் வராமல் தடுத்தல் ஆகிய இரு முறையில் பாதுகாப்பளிக்கின்றது.

இருப்பினும், முகக்கவசங்களை  முறையற்ற விதத்தில் பயன்படுத்தினால், தேவையற்ற பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

உங்கள் கண்களைத் தொடுவதற்கான தூண்டுதலை ஏற்படுத்தும்!

"முகக்கவசங்களை அணிந்துகொள்வது சுவாசத்தின் போது வெளியேற்றப்பட்ட காற்றை கண்களுக்குள் செல்ல வைக்கிறது" என்று லண்டன் பல்கலைக்கழக மருத்துவரும் தொற்றுநோயியல் நிபுணருமான அன்டோனியோ . லாசரினோ தெரிவித்துள்ளார். முகக்கவசங்களின் பக்க விளைவுகள் குறித்து பி.எம்.ஜே பத்திரிகைக்கு எழுதிய கட்டுறையிலேயே தெரிவித்துள்ளார்.

இது ஒரு சங்கடமான உணர்வையும் உங்கள் கண்களைத் தொடுவதற்கான தூண்டுதலையும் ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக நீங்கள் உங்களை அறியாமல்  உங்கள் கைகளினால் கண்களை தொடுகின்றீர்கள். இதன் போது உங்களின் கைகளில் உள்ள கிருமிகள் கண்ணில் தொற்றிக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனால் அடிக்கடி கைளை முறையாக கழுவுவ மறக்காதீர்கள்.

முகக்கவசங்கள் சுவாசத்தை கட்டுப்படுத்தலாம்!

முகக்கவசம் அணிதல் சுவாசத்தை மிகவும் கடினமாக்குகின்றது. நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மூச்சுத் திணறலை அதிகரிக்கின்றது. 

man wearing air filter mask having Dyspnea, breathing difficulty, respiratory distress in unhealthy, danger, polluted air environment

மேலும், முன்பு சுவாசிக்கப்பட்ட கார்பனீரொட்சைட்டின் ஒரு பகுதி ஒவ்வொரு சுவாச சுழற்சியிலும் மீண்டும் உள்ளிழுக்கப்படுகிறது. இதன் காரணமாக  உள் மற்றும் வெளி சுவாசத்தின் போது சுவாச அதிர்வெண் மற்றும் ஆழத்தை அதிகரிக்கின்றன, எனவே அவை உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றப்படும் காற்றின் அளவை அதிகரிக்கின்றது. 

அத்துடன் கொரோனா தொற்றிளால் பாதிக்கப்பட்ட நபர் முககவசம் அணிந்து சுவாசிக்கும் போது வைரஸ் மீண்டும் நுரையீரலுக்குள் சென்று தொற்றுக்குள்ளானவரின் மருத்துவ நிலையை மோசமாக்குகின்றது. 

ஆகவே உங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் மற்றவர்களிடமிருந்து உங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு முகக்கவசத்தை அகற்ற வேண்டும். அத்துடன் வைத்திய ஆலோசனையை பின்பற்ற வேண்டும் என மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர். 

சமூக இடைவெளியை குறைக்கின்றது!

முகக்கவசங்கள் அணிந்த நிலையில் மற்றவர்களுடனான உரையாடல்களின் போது கவனக்குறைவாக நீங்கள் நெருக்கமாகுகின்றீர்கள். 

people wearing medical mask for coronavirus covid 19 protection standing together beside office building and talking in city

ஒருவரிடம் பேசும்போது அவர்களிடமிருந்து ஆறு அடி தூரத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

முகக்கவசங்கள்  முறையாக தொற்று நீக்கா விட்டால் நோயைப் பரப்பலாம்!

பாக்டீரியா மற்றும் வைரஸ் கொல்லி அற்ககோல் தொற்று நீக்கிகளை பயன்படுத்துவதன் மூலம் முகக்கவசங்களை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.

reuse surgical face mask by using alcohol spray to kill bacteria and virus but that make waterproof layer no worked

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை காயப்படுத்தலாம்!

"துணியினால் ஆன முகக்கவசங்களை 2 வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகளுக்கு பயன் படுத்தக்கூடாது, சிறுவர்களுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படலாம் அல்லது அவர்கள் மயக்கமடையும் வாய்ப்புகள் உள்ளது. இதன் போது அவர்கள் தனியாக முகக்கவசங்களை அகற்ற முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. 

father and daughter

தோல் எரிச்சலை ஏற்படுத்தும்!

"உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், முகக்கவசம் அணிவதற்கு முன்பு மாய்ஸ்சரைசர் போடுவது நல்லது" என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முகக்கவசத்தினால் உங்கள் முகத்தில் ஏற்படும் ஒவ்வாமை, தோல் எரிச்சலைத் தடுக்க இது உதவும். அத்துடன் முகக்கவசம்  அணிவதற்கு முன்னும் பின்னும் உங்கள் முகத்தை சுத்தப்படுத்த  தவறாதீர்கள்