செப்டெம்பர் 20 ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் டிசம்பர் 20 ஆம் திகதிக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழு 2019 செப்டம்பர் 20 ஆம் திகதி நிறுவப்பட்டதுடன் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.