வவுனியாவில் இன்று பிற்பகல் 1 மணியளயவில் பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக மூன்று சக்கரவண்டியில் பயணித்த முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட வயோபதிபர் வீதியைக்கடக்க முற்பட்டபோது வவுனியா முல்லைத்தீவு தனியார் பேருந்து மோதியதில் காயமடைந்த வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

இச்சம்பவம்  குறித்து மேலும் தெரியவருகையில் , 

வவுனியா ஈச்சங்குளம் கருவேப்பங்குளம் பகுதியை சேர்ந்த இராசையா செல்வராசா (வயது 68) இன்று காலை வைத்தியசாலைக்கு சென்று நாய் கடிக்கு ஊசி போட்டுவிட்டு இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள போன் திருத்தம் செய்யும் கடைக்கு கைத்தொலைபேசி திருத்தம் செய்வதற்காக கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக பிரதான கண்டி வீதியைக்கடக்க முற்பட்டபோது திடீரென்று பயணித்த வவுனியா முல்லைத்தீவு தனியார் பேருந்து மூன்று சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் மீது மோதியது .

இதன்போது பேருந்து கீழ் பகுதியில்  சிக்கிக்கொண்ட நபர் கை, மற்றும் காலில் சிறுகாயமடைந்து அதிஷ்டவசமாக  பொதுமக்களினால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அமைதிக்கப்பட்டார் .

குறித்த நபர் கடந்த இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற எறிகணை தாக்குதலில் காயடைந்து இடுப்புக்குகீழ் செயற்பாடுகள் இன்றி முன்று சக்கர நாற்காலியின் துணையுடன் தனது அன்றாட செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார் .

 நான்கு பிள்ளைகளில் இவரது மகன் ஒருவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வவுனியா வசந்தி திரையரங்குக்கு முன்பாக வைத்து இனந்தெரியாதவர்களினால் காணமால் ஆக்கப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .