மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் 3வது மாடி கட்டிட தொகுதியில் பாரிய குளவி கூடுகள் உள்ளதால் 5 ஆம் இலக்க தங்கி சிகிச்சை பெரும் தொகுதியிலும் 6 ஆம் இலக்க தங்கி சிகிச்சை பெரும் தொகுதியிலும் தற்போது அங்கு தங்கி சிகிச்சை பெறுவோர் மிகவும் பீதியுடன் உள்ளனர்.

மேலும் வைத்தியாலையில் பணிபுரிவோர் மிகவும் அச்சத்தின் மத்தியில் பணிபுரிவதாகவும் தூய காற்றினை சுவாசிக்க யன்னல்களை திரந்து வைக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதுவிடயமாக கடந்த காலங்களில் பத்திரிகையில் செய்தி வந்த போது சற்று அகற்ற முயற்சித்தனர். இருந்த போதும் இன்றுவரை முழுமையாக அகற்றப்படவில்லை. 

சம்பந்தப்பட்ட நுவரெலியா சுகாதார அத்தியேட்சகர் மற்றும் வனத்துறையினர் இந்த 4 பாரிய குளவி கூடுகளை அகற்ற முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.