எதிர்வரும் 22 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் 5000 படமாளிகைகளில் வெளியாகவிருக்கிறது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி.

இப்படத்தின் பட்ஜட் எவ்வளவு என்பது இது வரை வெளியிடப்படாமல் இருந்து வந்தது. அண்மையில் தயாரிப்பாளர் தாணுவின் நெருக்கமான சிலர், கபாலி படத்தின் பட்ஜட் இந்திய மதிப்பில் 110 கோடி என்றும், இதில் ரஜினியின் உடை வடிவமைப்பிற்காகவே ஏறத்தாழ ஒன்றரை கோடி ரூபாய் செலவானது என்றும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இப்படம் தற்போதைய வியாபார கணிப்பின் படி 200 கோடி முதல் 300 கோடி ரூபாய் வசூலிக்கும் என்கிறார்கள் திரையுலக வணிகர்கள்.

கபாலி படத்தின் பட்ஜட்டில் சுப்பர் ஸ்டாரின் ஊதியம் மட்டும் சரி பாதி என்றும் கிசுகிசுக்கிறார்கள்.