கடனாக வழங்கிய பணத்தை திருப்பிக் கேட்க சென்றவர் மீது சரமாரி தாக்குதல்

By T Yuwaraj

07 Sep, 2020 | 03:13 PM
image

கடனாக வழங்கிய பணத்தொகையை திருப்பிக் கேட்ட நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று நேற்று வாழைச்சேனையில்  இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நபர் ஒருவர் மற்றொருவருக்கு கடனாக கொடுத்த பணத்தொகையை மீள கேட்ட போது அதனை வழங்காமல் இழுத்தடிப்பு செய்துள்ளார்.

குறித்த பணத்தை பலமுறைகள் கேட்டும் அதனை வழங்க மறுத்தவருக்கு எதிராக பணம் கொடுத்த நபர் மத்தியஸ்த சபையில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் முறைப்பாடு செய்த ஆத்திரத்தில் பணத்தை கடனாக பெற்றுக் கொண்ட நபர் பணம் கொடுத்த நபர் மீது மறைந்திருந்து கடும் தாக்குதலை நடத்தியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதுடன், தாக்குதலை நடத்தியவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right