திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் கிராமத்தில் இரவு வேலையில் உட்புகும் காட்டு யானைகள் தங்களது விவசாய பயிர்களை நாசம் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தங்களது வீட்டுப் பயிர் செய்கைகளான மா,பலா,வாழை போன்ற பல பயிர்களை அழித்து விட்டு சென்றுள்ளதாகவும் இரவு நேரங்களில் தூக்கத்தின் போது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பெரும் அட்டகாசத்தை ஏற்படுத்துவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்பற்ற யானை வேலி ,சில பகுதிகளில் யானை வேலி இன்மை காரணமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதாகவும் இதனால் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
உரிய அதிகாரிகள் காட்டு யானைகளை கட்டுப்படுத்தவும் தங்களது உயிர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM