மஸ்கெலியா சாமிமலை ஓல்டன் தோட்ட சிங்காரவத்தை பிரிவில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கானவகள் இன்று காலை தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் தேயிலை செடியினுள் இருந்த குளவிக்கூடு கலைந்ததால் 3 பெண்கள் இலக்காகியதாகவும் அவர்கள் தோட்ட அம்பியூலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 9 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் 11 மணிக்கே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிப்பதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.