டிக்கோயாவில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மின் இணைப்பு மின்சாரம் துண்டிப்பு ; மக்கள் பாதிப்பு

Published By: Digital Desk 4

07 Sep, 2020 | 11:08 AM
image

கடும் காற்றுடன் கூடிய அடைமழையால் ஹட்டன், டிக்கோயா மெனிக்வத்த 2 ஆம் பிரிவில் நேற்று 06.09.2020 11 மணியளவில் பாரிய மரமொன்று மின் இணைப்புகள் மீது முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 105 குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. மலைநாட்டிலும் கடும் காற்றுடன் அடைமழை பெய்துவருகின்றது. இந்நிலையில் நேற்று 06.09.2020 ஹட்டன், டிக்கோயா பகுதிகளில் கடும் காற்று வீசியுள்ளது.

காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் மாணிக்கவத்தை 2ஆம் பிரிவிலுள்ள மரமொன்று முறிந்து, மின் இணைப்பை வழங்கும் கம்பம் மீது விழுந்துள்ளது. இதனால் மின் கம்பிகள் எல்லாம் அறுந்து வீதியில் விழுந்துள்ளன. ஏனைய சில மின்கம்பங்களும் சரிந்துள்ளன.

இது தொடர்பில் கினிகத்தேன மின்சார சபைக்கு அறிவித்தும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஊர் மக்கள் தெரிவிக்கன்றனர்.

மின்கம்பங்கள் உடைந்துவிழும் அபாயம் இருப்பதால் 'கொங்றீட்' தூண்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தோட்ட மக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். ஆனாலும் நெடு நாட்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் தற்போது கொங்றீட் மின் கம்பங்கள் கொண்டுவரப்பட்டிருந்தாலும் அவற்றை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59