யாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் சாமி வந்து ஆடிய ஒருவர் சூலத்தின் மீது தவறிவிழுந்து படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

கோவில் பூசைகள் மாலை இடம்பெற்றிருந்த நிலையில் கெற்பேலி மேற்கு மிருசுவிலைச் சேர்ந்த 47 வயதான ஒருவருக்கு திடீரென சாமி வந்துள்ளது.

இதனையடுத்து அவர் சாமி ஆடிய படியே அங்கிருந்த சூலத்தின் மீது விழுந்துள்ளார்.

இதன்போது சூலம் அவரின் உடலில் ஏறி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.