(செய்திப்பிரிவு)

கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலஹருவ பகுதியில் நேற்று சனிக்கிழமை உடவலவ பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்ட விரோத மதுபான தயாரிப்புக்கு பயன்படும் கோடாவுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊவகுடா ஓயா பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 170 லீற்றர் கோடா, தகரம் , எரிவாயு அடுப்பு மற்றும் 2 இரும்பு பீப்பாய்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொஸ்லந்த பொலிஸார் சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.