கடந்த சில மாதங்களாக  மலையக பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பெருந்தோட்டதுறை ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் கடந்த மாதம் ஓரளவு வேலை வழங்கிய போதும் தங்களின் குடும்பங்களை கொண்டு நடாத்தும் அளவிற்கு வேதனம் இல்லையெனவும் இம்மாதம் வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே வேலை வழங்குவதால் எதிர்வரும் மாதங்களில் மிககுறைந்தளவு வேதனமே கிடைக்கும் எனவும் குடும்பத்தை கொண்டு நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கூட வேலை இல்லாத காரணத்தால் பருவகால சீட்டு மற்றும் ஏனைய உபகரணங்கள் பெற்று கொடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. பெருந்தோட்ட தொழிலை நம்பி வாழ்வது மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும் எதிர்காலம் இருண்ட நிலைக்கு தள்ளிவிடும் போல் தெரிவதால் தலைநகரில் போய் ஏதோ ஒரு வேலை செய்வதால் றாளாந்தம் 1000 முதல் 1500, 2000 வரை கிடைக்கின்றது

அதனால் ஆண்கள் தற்போது பெருந்தோட்ட தொழிலை நம்பி இருக்காது வெளியில் செல்கின்றனர். பெண்கள் மட்டுமே தங்களின் பிள்ளைகளை பாதுகாத்து கொண்டு பெருந்தோட்ட தொழிலை நம்பி வாழ்கின்றனர்.