(செய்திப்பிரிவு)

யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவெல்ல பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது உள்நாட்டில் தயாரிக்கப்படும் துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உடுவெல்ல - மாகெதற பகுதியைச் சேர்ந்த 39 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.