(செய்திப்பிரிவு)
கல்முனை கடற் பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சங்கமன்கண்டி கடற்பரப்பில் இருந்து 38 கடல் மைல் தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கல்முனை கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான எண்ணெய் படிமங்கள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் அவதானிக்கப்பட்டது. இதனால் அச்சமடைந்த கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்வதை நிறுத்தியுள்ளனர்.
குறித்த விடயம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, நாரா எனப்படும் நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜா தலைமையிலான அதிகாரிகளுடன் சனிக்கிழமை அவசர கலந்துரையாடலை நடத்திய அமைச்சர், கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் தொடர்பில் உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM