(செய்திப்பிரிவு)

கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு - திவுலுபிட்டிய வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

திவுலபிட்டிய நொக்கி சென்ற முச்சக்கர வண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் புரண்டு எதிர்த்திசையில் வந்த கெப் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.

கட்டான பகுதியைச் சேர்ந்த 33 வயதான நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.