(செய்திப்பிரிவு)

கல்கிஸை குற்றத்தடுப்புப் பிரிவினர் கல்கிஸ்ஸ - படோவிட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 440 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 34 வயது வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்