(இராஜதுரை ஹஷான்)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய நாளை முதல் முட்டை ஒன்றின் விலையை இரண்டு ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
தங்ககாலை- கால்டன் இல்லத்தில் நேற்ற சங்கத்தினருடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை முதல் வெள்ளை முட்டை ஒன்று 18, ரூபாவிற்கும், சிவப்பு முட்டை 18.50 ரூபாவிற்கும் விற்பனை செய்ய சங்கத்தினர் தீர்மாளித்துள்ளனர்.