சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகிவரும் 'வாழ்' படத்தில் இடம்பெறும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'அருவி ' என்ற  வெற்றிப் படத்தைத் தொடர்ந்து அதன் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வாழ்'. இப்படத்தில் புதுமுக நடிகர்கள் பிரதீப் அண்டனி, டிஜே, பானு , திவா தவான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, பிரதீப்குமார் இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த நிலையில், பிரதீப்குமார் இசையில் இடம்பெற்ற 'ஆஹா..: என தொடங்கும் சிங்கிள் ட்ராக் செப்டம்பர் 7 ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'கனா', 'நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'வாழ்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாக இருப்பதால் அவருடைய ரசிகர்களின் ஆதரவு, இந்த பாடலுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.