பங்களாதேஷில் உள்ள ஒரு மசூதியொன்றில் எரிவாயுக்குழாயொன்று வெடித்ததில் 12 பேர் பலியாகியுள்ளானர்.


குறித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, உயிருக்குப் போராடும் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பங்களாதேஷ் பொலிஸார் சனிக்கிழமை கூறும்போது, “பங்களாதேஷின் மத்தியப் பகுதி நகரமான நாராயன்கன்ஜியில் உள்ள மசூதியில் எரிவாயுக்குழாய் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது.இதனால் மசூதியில் பரவிய தீ, அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பரவியது. இதில் 12 பேர் பலியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.