தஞ்சை மாவட்டம் கண்டியூர் அருகே உள்ள திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் இன்று திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று வீசியதால் அந்த வீட்டில் பிடித்த தீ அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.

இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த போராடினர். இருப்பினும் பல வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. 

இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 60க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. 

குறித்த தீ விபத்து சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால்  ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.