நாட்டில் இன , மத ,பேதமற்று செயற்படக் கூடிய ஒரேயொரு கட்சி ஐக்கிய தேசிய கட்சியாகும். அத்தகைய கட்சிக்கு தலைமைத்துவம் வகிப்பதற்கு பொறுத்தமானவர் ருவன் விஜேவர்தன ஆவார். எனவே அவரை தலைமைத்துவத்திற்கு நியமிக்குமாறு தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுப்பதாக கேகாலை மாவட்ட அமைப்பாளர் ரகித தயான் விமலரத்ன தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் எவ்வித சிக்கலும் இல்லை. நாம் இளம் தலைவர் ஒருவரையே எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சி இளைஞர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் சிறந்த கட்சியாகும்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு ருவன் விஜேவர்தனவே பொறுத்தமானவர். ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்க வேண்டுமாயின் ருவன் விஜேவர்தனவைப் போன்று கட்சியை நேசிப்பவர்களை நியமிக்க வேண்டும்.

கட்சியை பாதுகாப்பதற்கும் , தமிழ் , சிங்கள மற்றும் முஸ்லிம்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து செயற்பட ஐக்கிய தேசிய கட்சியைத் தவிர வேறு கட்சியும் இல்லை. இவ்வாறானதொரு கட்சிக்கு சிறந்த தலைமைத்துவத்தை வகிக்கக் கூடியவர் ருவன் விஜேவர்தன ஆவார் என்றார்.