தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்பினர் தகுதி நிலையிலிருந்தும் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று அந்தக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

Articles Tagged Under: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Virakesari.lk

கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை அறிவித்தார்.

இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மேலும் தெரிவித்ததாவது;

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து கட்சியின் மத்திய குழுவால் நீக்கப்பட்ட. பின்னர் அவர் பதிலளித்திருந்தமை தொடர்பில் மத்திய குழு மீளவும் கூடி ஆராய்ந்து மணிவண்ணனின் பதில் தொடர்பில் ஆராய்ந்தது. அவரது பதில்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உறுப்பினர் தகுதி நிலையிலிருந்தும் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இடைநிறுத்தப்பட்டுள்ளார். அதுதொடர்பில் அவருக்கு இன்று காலை மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அத்துடன், பதிவுத் தாபலிலும் கடிதம் அனுப்பப்படும்.

வி. மணிவண்ணனுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர் தனது பக்க நியாயங்களை கட்சிக்கு அறிவிக்கவேண்டும். அதன்பின்னர் கட்சியால் அவர் மீது முன்வைக்கப்படும் 6 குற்றச்சாட்டுத் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும்.

எனவே தற்போது வி. மணிவண்ணன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெயரைப் பயன்படுத்தி செயற்பட முடியாது என்று பொதுமக்களுக்கு அறிவிக்கின்றோம். என்றார்.