கடந்த 4ம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முதலீட்டாளர்களின் கலந்துரையாடலை தொடர்ந்து யாழ் மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்தை கருதி முதலீட்டாளர்களை அதிகரித்து யாழ் மாவட்டத்தில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்ற நோக்கோடு யாழ் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை வாளாகத்திற்கு பாராளுமன்றகுழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன், விஐயம் மேற்கொண்டிருந்தார்.
இவ்விஐயத்தின் முக்கியமாக கைத்தொழில் பேட்டை வளாகத்தில் அமைத்துள்ள குறைபாடு பற்றி ஆரயாப்பட்டது.
இவ் விஐயத்தின் போது ஊடகங்ளுக்கு கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன்,
இவ் விஐயத்தின் மூலம் இங்குள்ள முதலீட்டு நிறுவனங்களின் குறைப்பாடுகளை ஆராய்ந்து தேவைப்பாடுகள் சம்மந்தமாக உரிய அமைச்சுகளுடன் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்படுவதன் ஊடாக உள்ளூர் முதலீட்டாளர்களையும் உள்வாங்கி வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் யாழ் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் ஆரம்பிக்க வைப்பதன் ஊடாக வேலைவாய்ப்புக்களையும் உருவாக்க வேண்டும். சரித்து வரும் எமது பொருளாதாரம் அனைத்துதுறைகளின் ஊடாக முன்னேற்றம் அடையவேண்டும் என்றார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த யாழ் அரச அதிபர் மகேசன்
இவ்விஐயம் மிகப்பயனுள்ளதாக அமைந்தது அபிவிருத்தி சம்மந்தமாகவும் குறைகளை கண்டறிவதற்கு நேரடியாக சென்று பார்வையிட்டலே அறிந்து கொள்ளமுடியும். யாழ் மாவட்ட அபிவிருத்தி சம்மந்தமாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
இவ் விஜயத்தில் யாழ் அரச அதிபரும் யாழ் ஒருங்கிணைப்பு சபையின் செயலாளருமான கணபதிபிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். முரளிதரன், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை பொறியிளாளர், ஊடகவியளாளர்கள் ஆகியோரும் பங்குபற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM