பாணந்துறை பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடன் இருந்து பொலிஸார் 422 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர்.

அத்தோடு சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.