ஐ.பி.எல் கிரிக்கெட் லீக் 2020 ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் 19 ஆம் திகதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்கு சென்றுள்ளது. 

எனினும் ஹர்பஜன் சிங் அணியுடன் அப்போது அங்கு செல்லவில்லை. தற்போது ஹோட்டல் அறையில் வீரர்கள் தனிமப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தமது சொந்த காரணத்திற்கான ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவொன்றை விடுத்துள்ளார்.

அதில் தாம் சொந்த காரணத்திற்கான ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாகவும் தமது குடும்பத்துடன் நேரம் செலவிட எண்ணியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  இரு தினங்களுக்கு முன் சுரேஷ் ரெய்னா சொந்த காரணத்திற்கான ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து விலகு வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.