(எம்.எப்.எம்.பஸீர்)

பாராளுமன்ற உணவகத்தின், பொருட்களை பொறுப்பேற்கும் அதிகாரி இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டார். 

இன்று காலை, கடுவலை பஸ் தரிப்பு நிலையம் அருகே, பழ வர்த்தகர் ஒருவரிடம் 60 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொள்ளும் போது அவரைக் கைது செய்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் பத்மினி வீரசூரிய தெரிவித்தார்.

சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு முன்னெடுத்துள்ளது.